காஷ்மீர் முதல் திருவனந்தபுரம் வரை செல்லும் ராணுவ வீரர்களின் பைக் பேரணிக்கு நெல்லையில் மாணவர்கள் வரவேற்பு

நெல்லை, டிச. 2: காஷ்மீர் முதல் திருவனந்தபுரம் வரை செல்லும் ராணுவ வீரர்களின் பைக் பேரணிக்கு நெல்லையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்தியா- பாகிஸ்தான் இடையே 1971ம் ஆண்டு நவ.17ம் தேதி முதல் 1971 டிச.3ம் தேதி வரை நடந்த போரில் இந்தியா வெற்றி ெபற்றது. இந்த வெற்றியின் 50ம் ஆண்டு தினத்தை நினைவுகூறும் விதமாகவும், மெட்ராஸ் ரெஜிமென்டல் சென்டரின் 263ம் ஆண்டு விழாவை முன்னிட்டும் இந்த சென்டரைச் சேர்ந்த ராணுவ வீரர்கள் 16 பேர் பைக்கில் பேரணியாக காஷ்மீர், குஜராத் ஆகிய இடங்களில் இருந்து இரண்டு குழுக்களாக புறப்பட்டு அரியானா, மகாராஷ்டிரா, ஆந்திரா, சென்னை, திருச்சி, மதுரை, நெல்லை, எர்ணாகுளம் வழியாக திருவனந்தபுரம் வரை செல்கின்றனர்.

ராணுவ வீரர்களின் பைக் பேரணி சென்னை, திருச்சி, மதுரை வழியாக நெல்லை சிவந்திபட்டி ரோடு ஜான்நகரில் உள்ள சீரடி சாய் ஆன்மிக மையத்திற்கு நேற்று வந்து சேர்ந்தது. ராணுவ வீரர்களுக்கு தியாகராஜநகர் புஷ்பலதா பள்ளியைச் சேர்ந்த மாணவ- மாணவிகள் தேசிய கொடியசைத்து வரவேற்பு அளித்தனர். ராணுவ வீரர்கள், பள்ளி மாணவ- மாணவிகளுடன் கலந்துரையாடினர். தொடர்ந்து அவர்கள் அங்கு வந்திருந்த நெல்லையைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர்களின் குடும்பத்தினருடன் கலந்துரையாடினர். முன்னாள் ராணுவ வீரர்களின் குடும்பத்தினர் மற்றும் பேரணியாக வந்த ராணுவ வீரர்கள் கவுரவிக்கப்பட்டனர்.

இந்நிகழ்ச்சியில் பைக்கில் பேரணியாக வந்த ராணுவ கேப்டன்கள் ெபரோஸ், சாம்சிங், சுபேதார் சதீஷ், பிரவீன், கிரண், சுஜித் உள்ளிட்ட ராணுவ வீரர்கள், பொன்னுத்தாய் உள்ளிட்ட முன்னாள் ராணுவ வீரர்களின் குடும்பத்தினர், சுபேதார் மேஜர்ரவி(ஓய்வு), சீரடி சாய் ஆன்மிக மைய தலைவர் பழனிவேல், சேகர் மற்றும் அம்மையத்தின் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories:

More