×

பிள்ளாபாளையம், குப்பம் பகுதியில் பட்டா மாறுதல் சிறப்பு முகாம் மனுக்களுக்கு உடனடி தீர்வு

கிருஷ்ணராயபுரம், டிச. 2: கிருஷ்ணராயபுரம் அருகே பிள்ளாபாளையம் கிராம நிர்வாக அலுவலகத்தில் பட்டா மாறுதல் குறித்து சிறப்பு முகாம் கிருஷ்ணராயபுரம் மண்டல துணை தாசில்தார் சவுந்தரவல்லி தலைமையில் நடைபெற்றது. இதில் பிள்ளாபாளையம், வல்லம் கொம்பாடிபட்டி வீரகுமரம்பட்டி போன்ற பகுதியை சேர்ந்த பொதுமக்களிடமிருந்து பட்டா மாறுதல் குறித்து 244 மனுக்கள் பெறப்பட்டது. இதில் 13 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது, மீதமுள்ள மனுக்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு உரிய தீர்வு காணப்படும் என்றனர். இதில் வருவாய் ஆய்வாளர் நசீமா பானு, நில அளவையர் வளர்மதி, கிராம நிர்வாக அலுவலர் ஸ்டாலின் பிரபு மற்றும் வருவாய் பணியாளர்கள் உடன் இருந்தனர். க.பரமத்தி: க.பரமத்தி அடுத்த அத்திப்பாளையம் மற்றும் குப்பம் ஆகிய இரு வெவ்வேறு ஊராட்சி பகுதி மக்களுக்கான வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை விவசாயிகள் மற்றும் வீட்டு உரிமையாளர்களின் பட்டா தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் சிறப்பு முகாம் குப்பம் கிராம நிர்வாக அலுவலகம் முன்பு நடைபெற்றது.

முகாமிற்கு குப்பம் விஏஓ சண்முகம் வரவேற்றார். ஊராட்சி தலைவர்கள் குப்பம் குப்பாத்தாள், அத்திப்பாளையம் பழனிச்சாமி ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களிடமிருந்து கோரிக்கை சம்பந்தமாக மனுக்கள் பெற்று முகாமை தொடங்கி வைத்து பார்வையிட்டனர். ஊர் முக்கிய நிர்வாகி சாலிபாளையம் செந்தில், மண்டல துணை தாசில்தார் அன்பழகன், ஆர்ஐ முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமிற்கு புகழூர் தாசில்தார் மதிவாணன் தலைமை வகித்து உரிய மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டு அதன் சான்றிதழ்களை உரியவர்களிடம் வழங்கினார். மீதமுள்ள மனுக்களுக்கு விரைவில் தீர்வு காணப்பட உள்ளதாக வருவாய்த்துறையினர் தெரிவித்தனர். முகாமில் வலையபாளையம் பூங்கொடி அழகுராசு, கிராம நிர்வாக அலுவலர்கள் லோகநாதன், பாலசுப்பிரமணி, நல்லசாமி, சரவணா, உஷாராணி, உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். நிறைவில் அத்திப்பாளையம் விஏஓ சரண்யா நன்றி கூறினார்.

Tags : Patta ,Pillapalayam, Kuppam ,
× RELATED நத்தம் பட்டா மாறுதலுக்கு இ-சேவை வழியாக...