காலியிடங்களை நிரப்ப வேண்டும் பேரூராட்சி பணியாளர் சங்கம் வலியுறுத்தல்

மதுரை, டிச. 2:  தமிழ்நாடு அரசு பேரூராட்சி பணியாளர் சங்க மாநிலத்தலைவர் பிச்சைமுத்து நேற்று மதுரையில் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடத்தப்படவுள்ளது. இதில், பேரூராட்சிக்கான தலைவரை மக்களால் நேரடியாக தேர்வு செய்யும் வகையில் சட்ட திருத்தம் செய்து, தேர்தலை நடத்த வேண்டும். தேர்தலுக்கு முன்பாக 1,100 பணியாளர்கள், கணினி ஆப்பரேட்டர்களை நிரந்தரம் செய்ய வேண்டும். இளநிலை உதவியாளர்கள், வரி தண்டலர்கள், விருப்பபணி மாறுதல் கோருவோர்களை தேர்தலுக்கு முன்பாக பணிமாறுதல்களை செய்ய வேண்டும்.  புதிய ஓய்வூதியத்திட்டத்தை ரத்து செய்வது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டிச.2(இன்று) மாவட்ட தலைநகரங்களில் அரசு பணியாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளோம். இதில், பேரூராட்சி பணியாளர்களும் பங்கேற்க உள்ளனர் என்றார்.

Related Stories:

More