×

யூனியன் சேர்மன் ஆய்வு

கமுதி, டிச.2: கமுதி மற்றும் சுற்று வட்டார பகுதியில் நேற்று முன்தினம் அதிகாலையில் கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால்ஏராளமான கண்மாய் மற்றும் ஊரணிகள் நிரம்பி வருகின்றன. இந்நிலையில் தொடர் மழை காரணமாக,கே.நெடுங்குளம் கிராமத்தில் உள்ள கண்மாய் முழுவதும் நிரம்பி ஒரு பகுதியில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறியது. இதனைகமுதி ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் தமிழ்ச்செல்வி போஸ் சென்று ஆய்வு செய்தார்.மேலும் இப்பகுதி மக்கள் தரைப்பாலம் வேண்டும் என்று ஒன்றிய குழுத் தலைவரிடம் கோரிக்கை வைத்தனர். விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

Tags :
× RELATED சிறுமியை ஆபாசமாக வீடியோ எடுத்தவர் கைது