×

மழையால் சேதமான பள்ளி கட்டிடங்கள் அகற்ற ஆசிரியர் கூட்டணி வலியறுத்தல்

சிவகங்கை, டிச.2: சிவகங்கை மாவட்டத்தில் சேதமடைந்த பள்ளி கட்டிடங்களை உடனடியாக அகற்ற வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட தலைவர் தாமஸ் அமலநாதன் தலைமையில் நடந்தது. மாநில செயலாளர் முருகன், மாநில துணைத்தலைவர் ஆரோக்கியராஜ், மாநில செயற்குழு உறுப்பினர் புரட்சித்தம்பி முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் முத்துப்பாண்டியன் தீர்மானங்களை முன்மொழிந்து பேசினார். நிர்வாகிகள் கலைச்செல்வி, குமரேசன், பாலகிருஷ்ணன், ரமேஷ்குமார், சிங்கராயர், சகாயதைனேஸ், ஜெயக்குமார் மற்றும் நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

மாவட்டம் முழுவதும் மழை பெய்து வருவதால் சேதமடைந்த பள்ளி கட்டிடங்களினால் மாணவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. எனவே பள்ளி கட்டிடங்களின் உறுதி தன்மையை ஆய்வு செய்து மிகவும் சேதமடைந்த கட்டிடங்களை உடனடியாக அகற்ற வேண்டும். தமிழக முதல்வரின் அறிவிப்பை முழுமையாக அமல்படுத்திடும் விதமாக ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் பங்கேற்ற அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களின் போராட்ட நாட்களை முறைப்படுத்தி ஊதியம் வழங்க வேண்டும். ஒன்றிய அரசு தொடர்ந்து அறிவித்து வரும் அகவிலைப்படி உயர்வை கணக்கில் கொண்டு மாநில அரசு உடனடியாக அகவிலைப்படி உயர்வை அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags : Teachers' Coalition ,
× RELATED அரியலூர், திருமானூரில் தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி ஆர்ப்பாட்டம்