×

கிராமப்புற மக்களுக்காக தமிழகத்தில் எண்ணற்ற திட்டங்களை முதல்வர் செயல்படுத்தி வருகிறார் அமைச்சர் பெரியகருப்பன் பேச்சு

திருப்புத்தூர், டிச.2: திருப்புத்தூரில் நேற்று வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் மூலம் 348 பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமை வகித்தார். ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன், வருவாய்த்துறையின் மூலம் 348 பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசுகையில்; கலைஞர் ஏழை, எளிய மக்களின் பொருளாதார முன்னேற்றத்திற்காக பல எண்ணற்ற திட்டங்களை அறிவித்து செயல்படுத்தினார். கலைஞர் ஆட்சி பொறுப்பேற்ற காலத்தில்தான் வறுமையிலுள்ளவர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா மற்றும் மாதாந்திர உதவித்தொகை என எண்ணற்ற திட்டங்களை வழங்கி சிறந்த முதல்வராக திகழ்ந்தார். அவரது வழிவந்த தளபதியார் ஆட்சி பொறுப்பேற்றவுடன், மாநிலம் முழுவதும் மக்களைத் தேடி பட்டா என்ற அடிப்படையில் வாரத்திற்கு இரண்டு நாட்கள் முகாம்கள் நடத்தப்படுகிறது.

அந்தந்த கிராமங்களில் நடத்தப்படும் சிறப்பு முகாம்கள் மூலம் பட்டாக்கள் வழங்கிடும் வகையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விண்ணப்பித்தவர்களுக்கு பட்டாக்கள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் தமிழக முதல்வர் கிராமப்புறங்களில் உள்ள மக்களின் பொருளாதார முன்னேற்றம் அடைந்தால்தான் நாடு வளர்ச்சி அடையும் என்ற உயர்ந்த நோக்கத்தில் கிராமப்புற மக்களுக்காக பல எண்ணற்ற திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். எனவே இதுபோல் ஒவ்வொரு திட்டமும் மக்களின் தேவையை உணர்ந்து செயல்பட்டு வருவதுடன் அவ்வப்போது ஏற்படும் பேரிடர்களையும் தகர்த்தெறிந்து மக்களை காக்கும் மகத்தான தலைவராக தமிழக முதல்வர் தளபதியர் இருந்து வருகிறார்’’ என தெரிவித்தார்.

தொடர்ந்து, வருவாய்த்துறையின் சார்பாக, சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 174 பயனாளிகளுக்கு ரூ.20லட்சத்து 88 ஆயிரம் மதிப்பிலான உதவித்தொகையும், தொடர் மழையின் காரணமாக வீடு சேதமடைந்த 31 பயனாளிகளுக்கு ரூ.1 லட்சத்து 46 ஆயிரத்து 200 மதிப்பிலான நிவாரணத் தொகையும், 122 பயனாளிகளுக்கு ரூ.34 லட்சத்து 16 ஆயிரத்து மதிப்பிலான வீட்டுமனை பட்டாவும், 21 பயனாளிகளுக்கு குடும்ப அட்டைகளும் என மொத்தம் 348 பயனாளிகளுக்கு ரூ.56 லட்சத்து 50 ஆயிரத்து 200 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பெரியகருப்பன் வழங்கினார்.

நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன், வருவாய் கோட்டாட்சியர் பிரபாகரன், மாவட்ட வழங்கல் அலுவலர் ரத்தினவேல், சமூக பாதுகாப்பு திட்ட தனி துணை ஆட்சியர் காமாட்சி, திருப்புத்தூர் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் சண்முகவடிவேல், கல்லல் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் சொர்ணம் அசோகன், கல்லல் திமுக ஒன்றிய செயலாளர் குன்றக்குடி சுப்பிரமணியன், மாவட்ட கவுன்சிலர் மஞ்சரி லெட்சுமணன், நெடுமரம் ஊராட்சி மன்ற தலைவர் மாணிக்கவாசகன் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Minister ,Periyakaruppan ,Chief Minister ,Tamil Nadu ,
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...