×

காணொலி காட்சி மூலம் ஐடிஐ விடுதிகள் திறப்பு

சிவகங்கை, டிச.2: சிவகங்கை அருகே முத்துப்பட்டியில் அரசு ஐடிஐல் புதிதாக கட்டப்பட்டுள்ள மாணவர் விடுதிக் கட்டிடத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். இதையொட்டி புதிய விடுதி வளாகத்தில் கலெக்டர் மதுசூதன்ரெட்டி குத்துவிளக்கேற்றி வைத்து மாணவர்களுக்கு இனிப்பு வழங்கி தெரிவித்ததாவது: சிவகங்கை மாவட்டத்தில் முத்துப்பட்டியில் உள்ள அரசு ஐடிஐல் ரூ.320 லட்சம் மதிப்பீட்டில் 100 மாணவர்கள் தங்கி படிக்கும் வகையில் 3தளங்கள் கொண்ட விடுதி கட்டிடம் இதுபோல் காரைக்குடி அரசு ஐடிஐல் ரூ.320லட்சம் மதிப்பீட்டில் 100மாணவர்கள் தங்கி படிக்கும் வகையில் 3தளங்கள் கொண்ட விடுதி கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இரண்டு விடுதிகளும் திறக்கப்பட்டுள்ளன. வரும் காலங்களில் அதிக அளவு மாணவர்கள் ஐடிஐ படிப்பதற்கு இதுபோன்ற விடுதி வசதிகள் மிகப்பயனுள்ளதாக இருக்கும். இவ்வாறு தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் முத்துப்பட்டி அரசு ஐடிஐ முதல்வர் முருகன், துணை முதல்வர் சன்சுசமான், பொதுப்பணித் துறை உதவி செயற்பொறியாளர் கண்ணன், உதவிப்பொறியாளர்கள் மாறன், தமிழ்செல்வி, முத்துஜெயம், கலைச்செல்வம் சீனி மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : ITI Hotels ,
× RELATED மெட்ரோ ரயில் பணிக்காக குழாய்கள்...