பெரியகுளம் பகுதியில் மழையால் வீடுகள் இடிந்து சேதம்

பெரியகுளம், டிச. 2: தேனி மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக பெய்த கனமழையால் பெரியகுளம் கீழ வடகரை ஊராட்சி பகுதியில் மூன்று வீடுகள் இடிந்து சேதம் அடைந்தது. இதில் நேற்று முன்தினம் மாலை முதல் இரவு வரை தொடர்ந்து பெய்த கனமழையால் பெருமாள்புரம் ராமர் கோயில் தெருவைச் சேர்ந்த முருகன் என்பவர் வீடும், அதே பகுதியில் பழனிச்சாமி என்பவரது வீடும், பெருமாள்புரம் சிவன் கோயில் பகுதியைச் சேர்ந்த லட்சுமி என்பவரது வீடும் இடிந்து சேதம் அடைந்தது. மேலும், வீட்டில் உள்ள பொருட்களும் சேதமடைந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக உயிரிழப்போ,  காயங்களோ ஏற்படவில்லை. வீட்டை இழந்தவர்கள் அரசிடம் உரிய நிவாரணம் கேட்டு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: