பொதுக்குழுக் கூட்டம்

காரியாபட்டி, டிச. 2: காரியாபட்டி அருகே தோணுகால் கிராமத்தில் திருமண மண்டபத்தில் சீட்ஸ் விவசாய உற்பத்தியாளர் நிறுவனத்தின் எட்டாவது ஆண்டு பொதுக்குழுக்   கூட்டம் நடைபெற்றது.  தலைவர் பாண்டியன் தலைமையில், நபார்டு வங்கி மாவட்ட வளர்ச்சி மேலாளர் ராஜசுரேஸ்வரன் முன்னிலையில் நடந்தது. இதில் முன்னோடி விவசாயி   சந்திரன் வரவேற்றார். சீட்ஸ் சி.இ.ஓ சிவக்குமார் ஆண்டறிக்கை வாசித்தார். நிகழ்ச்சியில் அசேபா நிறுவன லோகநாதன், மேலாளர் சுரேஷ்பாபு, யூனியன் வங்கி மேலாளர் செளந்தரலிங்கம், சீட்ஸ் ஆதார நிறுவன திட்ட ஒருங்கிணைப்பாளர் பாண்டியராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories:

More