திருவில்லிபுத்தூர் அருகே ரயில்வே சுரங்க பாலத்தில் தேங்கி நிற்கும் மழைநீர்

திருவில்லிபுத்தூர், டிச. 2: திருவில்லிபுத்தூர் பகுதியில் கடந்த ஒரு வாரமாக தொடர்மழை பெய்து வருகிறது. தொடர்மழைக்கு திருவில்லிபுத்தூர் பகுதியில் உள்ள கண்மாய்கள் மற்றும் குளங்கள் நிரம்பி வருகின்றன. தொடர்மழை காரணமாக சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இந்நிலையில், திருவில்லிபுத்தூர் அருகே உள்ள லட்சுமியாபுரம நூர்சாகிபுரம் சாலையில் உள்ள ரயில்வே சுரங்க பாதையில் சில தினங்களாக மழைநீர் குளம்போல் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த வழியாக வாகனங்களில் செல்வோர் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர். இரவு நேரங்களில் இந்த சாலையை பயன்படுத்துபவர்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே சுரங்க பாதையில் தேங்கியுள்ள மழைநீரை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: