கேஆர்பி அணைக்கு நீர்வரத்து 1443 கனஅடி

கிருஷ்ணகிரி, டிச.2: பெங்களூரு அருகேயுள்ள நந்திமலை, தென்பெண்ணை ஆற்றின் பிரதான நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால், ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து, தொடர்ந்து 2வது நாளாக 908 கனஅடியாக நீடித்தது. அணையின் பாதுகாப்பு கருதி, 908 கனஅடி தண்ணீரும் அப்படியே ஆற்றில் திறந்து விடப்படுகிறது. அணையின் மொத்த உயரமான 44.28 அடியில் தற்போது 40.02 அடிக்கு தண்ணீர் உள்ளது. இதேபோல், கிருஷ்ணகிரி அணைக்கு நேற்று முன்தினம் 1735 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று 1443 கனஅடியாக சரிந்துள்ளது. அணையில் இருந்து 1589 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணையின் மொத்த உயரமான 52 அடியில் தற்போது 50.60 அடிக்கு தண்ணீர் உள்ளது. மாவட்டத்தில் நேற்று காலை நிலவரப்படி 23.20 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

Related Stories: