பெரம்பூர் கே.சி.கார்டன் பகுதியில் பொதுமக்கள் சாலை மறியல்

பெரம்பூர்: சென்னையில் கடந்த மூன்று தினங்களாக பெய்த கனமழை காரணமாக பல்வேறு இடங்களில மழை நீர் தேங்கி சில இடங்களில் கழிவுநீர் சாலைகளில் தேங்கி உள்ளது. நேற்று மாலை 5 மணி அளவில் பெரம்பூரை அடுத்த பேசி கார்டன் பகுதியில் உள்ள மக்கள் தங்கள் பகுதியில் உள்ள கழிவுநீரை அகற்ற கோரி பெரம்பூர் பேப்பர் மில்ஸ் சாலை ராம் நகர் 4வது தெரு சந்திப்பில் சுமார் 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த செம்பியம் உதவி கமிஷனர் செம்பேடு பாபு மற்றும் திருவிக நகர் போலீசார் பொதுமக்களிடம் உடனடியாக கழிவுநீரை அகற்ற  நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின் பேரில் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Related Stories: