ஆர்.எஸ்.மங்கலத்தில் ஆலோசனை கூட்டம்

ஆர்.எஸ்.மங்கலம், டிச.1:  ஆர்.எஸ்.மங்கலத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டப்பணிகள் சார்பில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைகள் குறித்து, மக்கள் பிரதிநிதிகளுடன் கலந்தாலோசனை கூட்டம், சேர்மன் ராதிகா தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் யூனியன் ஆணையாளர் முத்துக்கிருஷ்ணன், வட்டார மருத்துவ அலுவலர்(பொ) முனீஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கலந்து கொண்ட ஒன்றிய கவுன்சிலர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளுக்கு. குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் நோக்கங்கள் மற்றும் பணிகள், போஷான் 2.0 திட்டம் உள்ளிட்டவைகள் குறித்து எடுத்து கூறினர்.

மேலும் சிறுதானிய உணவுகள் குறித்தும் மற்றும் இயற்கை உணவு முறைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு, செயல்முறையாக சிறுதானிய உணவுகள் பொருட்கள் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன. கூட்டத்தில், குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் இந்திரா காந்தி, வட்டார திட்ட உதவியாளர் அகத்தியன், வட்டார ஒருங்கிணைப்பாளர் சேக்பருதுல்லா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories:

More