×

விசிக ஆலோசனைக் கூட்டம்

அலங்காநல்லூரில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. சோழவந்தான் தொகுதிச் செயலாளர் ஊர்சேரி சிந்தனைவளவன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் செல்வ அரசு முன்னிலை வகித்தார். அலங்கை ஒன்றியச் செயலாளர் பாலமுருகன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளர்களாக எள்ளாலன், கலைவாணன், செல்லபாண்டியன் உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், ‘அம்பேத்கர் பிறந்தநாள் விழா, ஜெய்பீம் பேரணி செல்லுதல், பேரூராட்சி தேர்தலில் சோழவந்தான் தொகுதியில் உள்ள வாடிப்பட்டி, அலங்காநல்லூர், சோழவந்தான், பாலமேடு ஆகிய பேரூராட்சிகளில் விடுதலைச் சிறுத்தைகளின் சார்பில் வேட்பாளர்களை நிறுத்துதல் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்தல் ஆகியவை குறித்து முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கட்சி நிர்வாகி குறிஞ்சி செல்வன் நன்றி கூறினார்.

Tags : Vizika ,
× RELATED நீட் தேர்வு ரத்து..பழங்குடியினருக்கு...