×

நங்காஞ்சியாறு அணையில் உபரிநீர் வெளியேற்றம் அமைச்சர் அர.சக்கரபாணி ஆய்வு

ஒட்டன்சத்திரம், டிச. 1: ஒட்டன்சத்திரம்  வட்டம், இடையகோட்டையில் நங்காஞ்சியாறு அணை உள்ளது. இந்த அணையின் மூலம்  திண்டுக்கல் மாவட்டத்தில் இடையகோட்டை, வலையபட்டி, நாரப்பநாயக்கன்பட்டி,  கோவிந்தாபுரம், சின்னக்காம்பட்டி பகுதிகளில் 2,615 ஏக்கர் விவசாய நிலங்கள்,  கரூர் மாவட்டத்தில் சேந்தமங்கலம் கிழக்கு, சேந்தமங்கலம் மேற்கு,  குறிக்காரன்வலசு, குறும்பபட்டி, பழனிக்கவுண்டன்வலசு பகுதிகளில் 3,635  ஏக்கர் விவசாய நிலங்கள் என மொத்தம் 6,250 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி  பெறுகின்றன.

தற்போது பெய்து வரும் வடகிழக்கு பருவமழை காரணமாக  அணையில் நீர் நிரம்பி, முழு கொள்ளளவை எட்டி உபரிநீர் வெளியேறி வருகிறது.  இதனை உணவு- உணவுப்பொருள் வழங்கல்துறை அமைச்சர் அர.சக்கரபாணி நேரில்  பார்வையிட்டு, தணணீரில் மலர்தூவினார்.உடன் கலெக்டர் விசாகன், கூடுதல்  ஆட்சியர் தினேஷ்குமார், திமுக ஒன்றிய செயலாளர் ஜோதீஸ்வரன், ஒன்றிய தலைவர்  அய்யம்மாள், ஒன்றிய குழு உறுப்பினர்கள் செல்வி செல்லமுத்து, ஜென்சி  செல்வராஜ், ஊராட்சி மன்ற தலைவர் சரவணன் உள்ளிட்டோர் இருந்தனர்.

Tags : Minister ,A. Chakrabarty ,Nanganchiyaru Dam ,
× RELATED மோடியை திட்டி பேசினால் வீடு திரும்ப...