தமிழனின் தன்மானத்தை காக்கும் ஆட்சி தமிழகத்தில் நடக்கிறது பழநி விழாவில் ஐ.பி.செந்தில்குமார் எம்எல்ஏ பேச்சு

பழநி, டிச. 1: திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்பொய்யாமொழி ஆகியோரின் பிறந்தநாளையொட்டி பழநி அடிவாரத்தில் உள்ள அங்காளஈஸ்வரி திருமண மண்டபத்தில் நேற்று உதயநிதி ஸ்டாலின் ரசிகர் தலைமை நற்பணி மன்றம் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. ஐ.பி.செந்தில்குமார் எம்எல்ஏ தலைமை வகித்தார். நற்பணி மன்றத்தின் மாநில செயலாளர் பாபு, பொருளாளர் ராஜா, மாநில துணை செயலாளர் ரூபன் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் விஜய் மாயப்பன் வரவேற்றார். விழாவில் மாற்றுத்திறனாளிகளுக்கு நான்கு சக்கர பைக், பெண்களுக்கு தையல் இயந்திரம், தேய்ப்பு பெட்டி, சுகாதார பணியாளர்களுக்கு சேலை- வேட்டி என 1500 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து பழநி அரசு மருத்துவமனைக்கு 50 ஆளுயுர மின்விசிறிகள், 100 கட்டில்கள் வழங்கப்பட்டன.

பின்னர் ஐ.பி.செந்தில்குமார் எம்எல்ஏ பேசியதாவது, ‘5 மாத காலத்தில் தமிழகம் பல்வேறு துறைகளில் முதலிடத்தை பெற்றுள்ளது. தேசிய அளவில் தமிழக முதல்வர் ஸ்டாலின் முதலிடத்தை பிடித்துள்ளார். தற்போது மக்களுக்கான அரசாங்கம் நடந்து வருகிறது. மக்கள் நலன் மட்டுமே இந்த அரசின் முக்கிய நோக்கமாகும். தமிழனின் தன்மானத்தை காக்கும் ஆட்சி தமிழகத்தில் நடந்து வருகிறது. திமுக அரசு தமிழகத்தை வளர்ச்சி பாதையில் அழைத்து சென்று கொண்டிருக்கிறது. மக்களும் அதனை உணர்ந்து நல்ல வரவேற்பு தருகின்றனர்’ என்றார்.

இதில் நற்பணி மன்ற மாவட்ட பொருளாளர் சுந்தர், பழநி யூனியன் தலைவர் ஈஸ்வரி கருப்புச்சாமி, திமுக நகர செயலாளர் தமிழ்மணி, ஒன்றிய செயலாளர்கள் சௌந்திரபாண்டியன், சாமிநாதன், முன்னாள் நகராட்சி தலைவர்கள் உமாமகேஸ்வரி, வேலுமணி, நகர துணை செயலாளர் சக்திவேல், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கணேசன், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் பிரபாகரன், நகர இளைஞரணி அமைப்பாளர் லோகநாதன், மாவட்ட நெசவாளரணி அமைப்பாளர் சோ.காளிமுத்து, முன்னாள் கவுன்சிலர்கள் காளீஸ்வரி பாஸ்கரன், இந்திரா திருநாவுக்கரசு, செபாஸ்டியன், ஒன்றிய இளைஞரணி நிர்வாகிகள் எஸ்கேஆர் ரமேஷ், ரஞ்சித்குமார், இதயத்துல்லா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Related Stories: