×

அரியலூர் மாவட்டம் கோட்டைக்காடு வெள்ளாற்றில் மேம்பாலம் கட்டும் பணி பாதியில் நிறுத்தம்

அரியலூர்,ஏப்.23: அரியலூர் வெள்ளாற்றில் கட்டபட்ட மேம்பால பணி பாதியில் நிறுத்தப்பட்டுள்ளதால், இருபுறமும் பக்க சுவர் எழுப்பி இணைப்பு சாலை அமைக்க வேண்டும் என கோரிக்கைவிடப்பட்டுள்ளது. அரியலூர்-கடலூர் மாவட்டங்களை இணைக்கும் வெள்ளாற்றில் ஒவ்வொரு ஆண்டும் பெய்யும் கனமழை தரைபாலம் அடித்து செல்லப்பட்டு மாதக் ககணக்கில் 15 கிலோ மீட்டர் சுற்றி பொதுமக்கள் செல்வார்கள். இதனால் இரு மாவட்டத்தை சேர்ந்த கிராமமக்கள் மேம்பாலம் கட்ட வேண்டும் என்ற கோரிக்கை விடுத்தனர். இந்த கோரிக்கையை ஏற்று கோட்டைக்காடு வெள்ளாற்றின் குறுக்கே ரூ.30 கோடி செலவில் மேம்பாலம் கட்டும் பணி இரண்டு ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்டு நடைபெற்றுவந்த பணி தற்போது நிறைவடைந்துள்ளது.

இந்நிலையில் இருபுறமும் பக்க சுவர் எழுப்பி சாலை அமைக்கும் பணி துவங்க வேண்டும். பாலத்தின் கிழக்குப்புரம் கோட்டைக்காடு சாலையில் 100அடி தூரத்தில் ஓடை செல்கிறது, மழைக்காலத்தில் ஓடையில் நீர்வரத்து அதிகமாக இருக்கும் எனவே அந்த ஓடையின் குறுக்கே சிறுபாலம் கட்ட வேண்டும். மேற்கு புரத்தில் மின் கம்பம் உள்ளதை அப்புறப்படுத்த வேண்டும். இந்த பணிகளுக்கு திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு அரசுக்கு அனுப்பப்பட்டதாக தெரிகிறது. இதுவரை வேலை செய்வதற்கான அனுமதி கிடைத்ததாக தெரியவில்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தலையிட்டு இருபுரமும் பக்கச்சுவரும், சாலை அமைக்கும் பணியையும் விரைந்து முடிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என திமுக ஒன்றிய செயலாளர் ஞானமூர்த்தி கலெக்டர் மற்றும் கோட்ட பொறியாளருக்கு பொதுமக்கள் சார்பாக கோரிக்கை மனு அனுப்பியுள்ளார்.

Tags : Ariyalur District ,Kottaikadu ,
× RELATED அரியலூர் மாவட்டம் செந்துறையில் 100...