×

வேதாரண்யத்தில் எள் சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்

வேதாரண்யம், ஏப்.23: வேதாரண்யத்தில் கோடைகால எள் சாகுபடியில் விவசாயிகள் ஆர்வத்துடன் ஈடுபட்டுள்ளனர். நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த ஆதனூர், அண்டர்காடு, கருப்பம்புலம், கரியாப்பட்டினம், ஆயக்காரன்புலம், செட்டிபுலம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 5,000 ஏக்கரில் கோடைகால எள் சாகுபடி நடைபெற்று வருகிறது. சம்பா சாகுபடி அறுவடை நிறைவுற்ற நிலையில் குறைந்த ஈரப்பதத்திலும், அதிக அளவு உரம் இடுதல் இல்லாமலும், பூச்சி தாக்குதல் இல்லாமலும், அதிக வெப்பத்தைத் தாங்கி வளரக்கூடிய எள் சாகுபடியை விவசாயிகள் ஆர்வமுடன் அதிகளவில் செய்து வருகின்றனர். தற்போது எள் செடிகள் நன்றாக வளர்ந்து பூத்தும், காய்த்தும் குலுங்கி வருகிறது. குறைந்த செலவில் அதிக லாபம் ஈட்டும் எள் சாகுபடியை விவசாயிகள் விரும்பி அதிக அளவில் மேற்கொண்டு வருகின்றனர். இந்த ஆண்டு கோடை மழை நன்றாக பெய்து உள்ளதால் எள் விளைச்சல் அமோகமாக இருக்கும் என எள் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags : Vedaranyam ,
× RELATED வேதை அருகே பாஜ அலுவலகம் திறப்பு:...