கரூர் காமராஜ் மார்க்கெட் பகுதியில் சுகாதார சீர்கேட்டில் இரட்டை வாய்க்கால்

கரூர், ஏப்.23: கரூர் காமராஜ் மார்க்கெட் வழியாக செல்லும் இரட்டை வாய்க்கால் சுகாதார சீர்கேட்டுடன் துர்நாற்றம் வீசி வருகிறது. கரூர் நகரின் முக்கிய பகுதிகளின் வழியாக இரட்டை வாய்க்கால் செல்கிறது. இதில், மார்க்கெட் வழியாக செல்லும் இரட்டை வாய்க்காலை சீரமைத்து மேற்புறம் பாதசாரிகள் நடந்து செல்லும் வகையில் சில மாதங்கள் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. தற்போது பணிகள் முழுமையடையாத நிலையில், கழிவுநீர் மொத்தமாக தேங்கி பல்வேறு சுகாதார சீர்கேடுகளை இந்த பகுதியில் ஏற்படுத்தி வருகிறது. மேலும் இந்த இரட்டை வாய்க்காலில் கழிவு நீர் தேங்கி பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசி வருகிறது. இதில் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயத்தை ஏற்படுத்தி வருகிறது. எனவே, இந்த இரட்டை வாய்க்காலை தூர்வாரி, கழிவுநீர் தேங்கி நிற்காமல் எளிதாக செல்லும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் சுகாதார சீர்கேட்டிலிருந்து மீளவேண்டும் என இந்த பகுதியினர் எதிர்பார்ப்பில் உள்ளனர். மேலும் துறை அதிகாரிகள் துர்நாற்றம் ஏற்படும் வகையில் கழிவுநீர் தேங்கியுள்ளதை பார்வையிட்டு விரைந்து அதனை அகற்றி தேவையான நடவடிக்கைகளை பணியாளர்கள் மூலம் மேற்கொள்ள வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

More
>