டெய்லர் தற்கொலை

திருப்பூர், ஏப். 23: திருப்பூர் வீரபாண்டி ராஜாநகரை சேர்ந்தவர் சுப்ரமணியின் மகன் ஜெயக்குமார் (31). இவர், பனியன் நிறுவனத்தில் டெய்லராக வேலை பார்த்து வந்தார். ஜெயக்குமார் குடிப்பழக்கத்திற்கு அடிமையானதால் அடிக்கடி குடித்து விட்டு வந்து தனது மனைவியுடன் தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது. இந்நிலையில், வழக்கம் போல் நேற்று முன்தினம் இரவு ஜெயக்குமார் குடித்து விட்டு வீட்டுக்கு வந்துள்ளார். இதனால், கணவன்-மனைவிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால், மனவேதனையில் இருந்த ஜெயக்குமார் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.இது குறித்து தகவலறிந்த வீரபாண்டி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Related Stories:

More