குறு சிறு தொழிற்சாலைகள் இயங்க அனுமதி கலெக்டருக்கு தொழில்முனைவோர் நன்றி

கோவை, ஏப். 23: தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த 20ம் தேதி முதல் இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரை இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு உத்தரவு பிறக்கப்பிக்கப்பட்டுள்ளது.

இதில், அத்தியாவசிய மற்றும் சில குறிப்பிட்ட பொருட்கள் உற்பத்தி செய்யும் தொழில்நிறுவனங்கள் இரவு நேரம் இயங்க தமிழக அரசு அனுமதி அளித்திருந்தது. இதனிடையே, கோவை சேர்ந்த சிறு குறு தொழில்முனைவோர்கள் இரவு நேர ஊரடங்கின் போது தொழிற்சாலைகள் இயங்க மாவட்ட கலெக்டர் நாகராஜனிடம் அனுமதி கேட்டிருந்தனர். இதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.  இதுகுறித்து தமிழ்நாடு கைத் தொழில் மற்றும் குறுந்தொழில் முனைவோர் சங்க மாவட்ட தலைவர் ஜேம்ஸ் கூறியதாவது:தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக அரசு இரவு நேர ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து உள்ளது. மேலும், தொழிற்சாலைகளில் சில குறிப்பிட்ட உற்பத்திக்கு மட்டும் அனுமதி வழங்கி இருந்தது. கோவையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குறு சிறு தொழிலகங்கள் மேற்கண்ட அரசு அனுமதித்த தொழில் நிறுவனங்களுக்கான உதிரிபாகங்கள் தயாரிப்பில் ஈடுபடுவதால், இரவு நேரம் இயங்க கோவையில் உள்ள தொழில் அமைப்புகள் கலெக்டரிடம் அனுமதி கோரி இருந்தோம். இதற்கு மாவட்ட கலெக்டர் பாதுகாப்பு நடவடிக்கையுடன் இயங்க அனுமதி அளித்துள்ளார். இதற்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories:

>