உக்கடம் பெரியகுளத்தில் ஆகாயத்தாமரைகளை அகற்ற கோரிக்கை

கோவை, ஏப். 23:  கோவை மாநகராட்சியில் அண்மையில் உக்கடம் பெரியகுளம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சீரமைக்கப்பட்டு மக்களின் பயன்பாட்டிற்கு திறந்தது. தற்போது மீண்டும் ஆகாயத்தாமரை பெரியகுளத்தில் படர்ந்து வருகிறது.

கோவை மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் குளங்களை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இவற்றில் உக்கடம் பெரிய குளத்தில் குய்க்வின் பகுதியில் 1.2 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரூ.39.74 கோடி மதிப்பீட்டிலும், பேஸ்-1 பகுதியில் 4.3 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரூ.62 கோடி மதிப்பீட்டில் குளத்தினை புனரமைத்து, சீரமைக்கும் பணிகள் நடைபெற்றது. 100 சதவீதம் பணிகள் நிறைவடைந்ததை அடுத்து கடந்த பிப்ரவரி மாத இறுதியில் மக்கள் பயன்பாட்டிற்காக உக்கடம் பெரிய குளம் திறக்கப்பட்டது. தற்போது கொரோனா 2வது அலை காரணமாக கொரோனா தடுப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக மக்கள் அனுமதிக்கப்படுவதில்லை.இதனிடையே உக்கடம் பெரியகுளத்தில் மீண்டும் ஆகாயத்தாமரை படர்ந்து வருகிறது. இதனை அகற்ற மாநகராட்சி அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை என சமூக ஆர்லவர்கள் புகார் தெரிவிக்கின்றனர். உடனடியாக ஆகாயத்தாமரைகளை அகற்ற வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories:

More
>