முககவசம் அணியாத 366 பேர் மீது வழக்கு

ஈரோடு,ஏப்.23: ஈரோடு மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகிறது. இதில், முககவசம் அணியாமலும், சமூக இடைவெளியின்றி கடைகள் நடத்துபவர்களுக்கு மாநகராட்சி, சுகாதாரத்துறையினர் அபராதம் விதித்து வருகின்றனர். இந்நிலையில், மாவட்ட காவல் துறையின் சார்பில் போலீசார் முக கவசம் அணியவில்லை என்றால் அபராதம் விதித்து வருகின்றனர். ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் முக கவசம் அணியாமல் வந்த வாகன ஓட்டிகள், சாலையில் நடந்து வந்த பொதுமக்கள் என 366 பேர் மீது வழக்கு பதிந்து அபராதம் விதித்தனர். இந்த அபராதங்களை வங்கி மூலமாகவும், நீதிமன்றம் மூலமாக செலுத்தி விடுவார்கள் என போலீசார் தெரிவித்தனர்.

Related Stories:

>