கடமலை-மயிலை ஒன்றியத்தில் போதிய பஸ் வசதியின்றி கிராம மக்கள் அவதி

மாணவர்கள் படிக்கட்டில் பயணம் செய்யும் அவலம்

வருசநாடு, மார்ச், 24: கடமலை-மயிலை ஒன்றியம் மயிலாடும்பாறை அருகே நேருஜி நகர், மூலக்கடை, சிறப்பாறை, முத்தாலம்பாறை, தாழையூத்து, அருகவெளி, கருமலைசாஸ்தாபுரம் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களுக்கு போதிய பஸ் வசதி இல்லை. 2 அரசு பஸ்கள் மட்டும் இயக்கப்படுகின்றன. தனியார் பஸ் இயக்கப்படுவதில்லை. இதனால், பஸ்களில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும். குறிப்பாக காலை, மாலை நேரங்களில் பள்ளிகளுக்கு செல்லும் மாணவ, மாணவிகள் கூட்ட நெரிசல் காரணமாக அவதிப்படுகின்றனர். தற்போது கொரோனா பரவலால் 11ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தனியார் பள்ளிகளில் பிளஸ் 2 மாணவர்களுக்கு வகுப்பு நடத்தப்படுகிறது. இதனால், கூட்ட நெரிசல் காரணமாக மாணவர்கள் ஆபத்தான முறையில் படிக்கட்டுகளில் தொங்கியவாறு பயணம் செய்கின்றனர். பெட்ரோல், டீசல் விலை அதிகரிப்பால், ஆட்டோக்களில் கட்டணம் இரண்டு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், பஸ்களில் ஆபத்தான முறையில் பஸ்களில் மாணவர்கள் பயணம் செய்கின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து காலை மற்றும் மாலை நேரங்களில் வசதிக்காக முத்தாலம்பாறை பகுதிக்கு கூடுதல் அரசு பஸ்கள் இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: