முத்துப்பேட்டையில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைத்து தருவேன் திமுக வேட்பாளர் காதர்பாட்சா உறுதி

ராமநாதபுரம், மார்ச் 24:  முத்துப்பேட்டையில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைத்து தருவேன் என திமுக வேட்பாளர் காதர் பாட்சா முத்துராமலிங்கம் உறுதி அளித்தார். ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி திருப்புல்லாணி கிழக்கு ஒன்றியம் முத்துப்பேட்டை பகுதியில் அவர், தீவிர வாக்குகள் சேகரித்தார். அங்கு, அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைத்து தருவேன் என அவர் உறுதியளித்தார். ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி தேர்தல் குழு பொறுப்பாளர் ஏ.எம்.ரவீந்திரநாத் ஜெயபால், திருப்புல்லாணி கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர் நாகேஸ்வரன், காங்கிரஸ் மாவட்ட தலைவர் செல்லதுரை அப்துல்லா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நைனா மரைக்கான் மாரியம்மன் கோயிலில் வேட்பாளர் காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் தரிசனம் செய்தார். பின்னர் அப்பகுதியில் தீவிர வாக்கு சேகரித்தார். நைனாமரைக்கான் ஊராட்சி பனை வெல்லம் கூட்டுறவு சங்க தலைவர் முனியசாமி, சக்திபுரம் அதிமுக கிளை செயலாளர் ராமகிருஷ்ணன், குளந்தோப்பு அதிமுக கிளை செயலாளர் ரவி, பிரதிநிதி கணபதி உள்ளிட்டோர் அதிமுக வில் இருந்து விலகி, வேட்பாளர் காதர் பாட்சா முத்துராமலிங்கம் முன்னிலையில் திமுக வில் இணைந்தனர். பி.டி.ராஜா தலைமையில் வேட்பாளர் காதர் பாட்சா முத்துராமலிங்கத்திற்கு பிரசாரம் செய்தனர். ராமநாதபுரம் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக மனு செய்த மணிமாறன் தனது வேட்புமனுவை வாபஸ் பெற்று காதர் பாட்சா முத்துராமலிங்கத்திற்கு ஆதரவு தெரிவித்தார்.

Related Stories:

More