திருமங்கலம் பகுதியில் அமைச்சர் உதயகுமார் வாக்கு சேகரிப்பு

திருமங்கலம், மார்ச் 24: திருமங்கலம் ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு கிராமங்களில் அமைச்சர் உதயகுமார் பிரசாரம் செய்து பொதுமக்களிடம் வாக்குகள் சேகரித்தார். திருமங்கலம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் அமைச்சர் உதயகுமார் போட்டியிடுகிறார். இவர் நேற்று திருமங்கலம் ஒன்றியத்திற்குட்பட்ட பொட்டிபுரம், சித்தரெட்டிபட்டி, மீனாட்சிபுரம், சௌடார்பட்டி, வலையபட்டி, பூசலப்புரம், மதிப்பனூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் பொதுமக்களிடம் வாக்குசேகரித்தார். பிரசாரத்தில் அவர் பேசுகையில், ‘முதியோர் உதவித்தொகை ரூ.2 ஆயிரமாக உயர்த்தப்படும், வீடுகள்தோறும் வாசிங்மெசின் வழங்கப்படும். இதுபோல் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் அறிக்கையில் 163 திட்டங்களை அறிவித்துள்ளார். அவை அனைத்தும் கட்டாயம் நிறைவேற்றப்படும். திருமங்கலம் தொகுதியில் திட்டங்கள் தொடர எனக்கு ஆதரவு தாருங்கள்’ என்றார். பிரசாரத்திற்கு இடையே அமைச்சர் சித்திரெட்டிபட்டியில் கபசுர குடிநீர் தயாரிக்கும் தொழிற்சாலைக்கு சென்று அங்கு பணிபுரியும் பெண்களிடமும், பொட்டிபுரம் கிராமத்தில் கட்டிப்பணிகளில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களிடம் வாக்கு சேகரித்தார்.

Related Stories:

>