×

வணிகர் கூட்டமைப்பு விழிப்புணர்வு கூட்டம்

பாலக்கோடு, ஏப்.23: மாரண்டஅள்ளி பேரூராட்சி அலுவலகத்தில், வணிகர் சங்கங்கள் மற்றும் வணிகர் கூட்டமைப்புகள் ஊரடங்கின் போது கடை பிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து விழிப்புணர்வு ஆலோசனை கூட்டம் நடந்தது.
கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக, தமிழகம் முழுவதும் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. வாரத்தின் இறுதி  நாட்களான ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு நடைபெறுவதையொட்டி வணிகர்கள் நடத்தும் கடைகள் மற்றும் நிறுவனங்கள், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை எப்படி மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து விழிப்புணர்வு கூட்டம் நேற்று நடந்தது. இதில், கடைகளுக்கு வாடிக்கையாளர்கள் வரும்போது சமூக இடைவெளி மற்றும் முகக்கவசம் அணிந்து வர வலியுறுத்த வேண்டும்.  நிறுவனங்களின் முன்புறம் சானிடைசர் வைப்பது போன்ற ஆலோசனைகள் வழங்கப்பட்டன. மேலும், வணிகர்கள் ஒவ்வொருவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்று மாரண்டஅள்ளி பேருராட்சி அலுவலர் டார்த்தி கேட்டுக் கொண்டார். இந்நிகழ்ச்சியில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை வணிகர்கள் மேற்கொள்ள வேண்டி உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். இதில் 50க்கும் மேற்பட்ட வணிகர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Merchant Federation Awareness Meeting ,
× RELATED திரவுபதியம்மன் கோயில் கும்பாபிஷேக பெருவிழா