×

பட்டுக்கோட்டையில் மாணவர்களுக்கு கிராமப்புற வேளாண் பயிற்சி

பட்டுக்கோட்டை, ஏப்.20: பட்டுக்கோட்டை வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தில் ஈச்சங்கோட்டை வேளாண் கல்லூரியை சேர்ந்த இறுதி ஆண்டு இளம் அறிவியல் பட்டப்படிப்பு பயின்றுவரும் மாணவர்கள் கிராமப்புற வேளாண் பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக பட்டுக்கோட்டை வேளாண் ஆராய்ச்சி நிலையத்திடல்களில் உளுந்து விதை உற்பத்திக்காக விதை விதைப்பு பயிற்சியில் ஈடுபட்டனர்.

அப்போது மாணவர்கள் பண்ணை தொழிலாளர்கள் மற்றும் அலுவலக உதவியாளர்களுடன் சேர்ந்து இயந்திரத்தின் உதவியுடன் நிலம் உழுதல், நிலம் தயாரித்தல், நில வரைபடம் தயாரித்தல், பாத்தி அமைத்தல், சமப்படுத்துதல் மற்றும் உரமிடுதல் போன்ற பயிற்சிகளை மேற்கொண்டனர். அதனை தொடர்ந்து உதவி பேராசிரியர் தமிழ்ச்செல்வன் மேற்பார்வையில் மேற்பார்வையின்கீழ் ஏடிடி 5 உளுந்து விதைகளை விதைத்து அதன் முக்கியத்துவம் மற்றும் பயன்களை அறிந்து கொண்டனர்.

Tags : Pattukottai ,
× RELATED பட்டுக்கோட்டை ரயில் நிலையத்தில்...