கொரோனா அலை பரவும் நிலையில் உரிய ஆணை பிறப்பிக்காமல் பள்ளிக்கு வரச்சொல்லலமா? ஆசிரியர் கூட்டணி கண்டனம்

மதுரை, ஏப். 20: ஆசிரியர்களுக்கு உரிய ஆணை பிறப்பிக்காமல் பள்ளிக்கு வரச் சொல்லும் கல்வி அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேசிய ஆசிரியர் கூட்டணி பொதுச் செயலாளர் போகர் தமிழ்குமரன் வலியுறுத்தி உள்ளார்.

  மதுரையில் அவர் கூறி இருப்பதாவது: தமிழ்நாட்டில் 2ம் அலை கொரோனா வேகமாக பரவி வரும் சூழ்நிலையில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. மேலும் இந்த கொரோனா காலத்தில் உரிய அரசாணை இல்லாமல் வெறும் செவி வழியாகவும், வாட்ச் அப் வழியாக ஆசிரியர்களை பள்ளிக்கு வர சொல்கின்றனர். இதனால் மனஉளைச்சல் ஏற்படுகிறது. மேலும் கொரோனா தொற்று ஏற்பட்டு பல ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டும், இறந்தும் உள்ளனர். உரிய ஆணை பிறப்பிக்காமல் ஆசிரியர்களை பள்ளிக்கு வரச் சொல்லும் கல்வி அலுவலர்கள் மீது சட்டப்படி நீதிமன்ற வழக்குத் தொடுக்க தேசிய ஆசிரியர் கூட்டணியானது தயாராக உள்ளது. மேலும் இதுபோன்று செயலில் ஈடுபடும் கல்வி அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Related Stories:

>