பாளையில் கபசுர குடிநீர் வழங்கல்

நெல்லை, ஏப். 20: நெல்லை மாநகராட்சி ஆணையாளர் கண்ணன் உத்தரவின்பேரில் சுகாதார நல அலுவலர் டாக்டர் சரோஜா ஏற்பாட்டில் நேற்று பாளை மண்டலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. மண்டல உதவி ஆணையாளர் பிரேம் ஆனந்த், சுகாதார அலுவலர் அரசகுமார் ஆகியோர் மேற்பார்வையில் சுகாதார ஆய்வாளர் நடராஜன் தலைமையில் அரசு மருத்துவமனை சாலையில் ஆட்டோ ஓட்டுநர்களிடம் நோய் பரவலை கட்டுபடுத்துவது குறித்த விழிப்புணர்வு துண்டுபிரசுரங்கள் வழங்கப்பட்டது. இதேபோல் கபசுரக் குடிநீரும் வழங்கப்பட்டது. இதில் மேற்பார்வையாளர் சண்முகம், தூய்மை  இந்தியா திட்ட பரப்புரையாளர் கனகப்ரியா, சீதாலட்சுமி, எல்சிஎப் கண்ணன்,  அருள்செல்வன் மற்றும் பணியாளர்கள் பங்கேற்றனர். பாளை மார்க்கெட் அருகே மனகாவலம்பிள்ளை மருத்துவமனைக்கு வந்த நோயாளிகள் மற்றும் மார்க்கெட்டுக்கு வந்த பொதுமக்களுக்கும், தூய்மைப் பணியாளர்களுக்கும் கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது. 450க்கும் மேற்பட்டோர் பயனடைந்தனர். இதற்கான ஏற்பாடுகளை சுகாதார அலுவலர் அரசகுமார், ஆய்வாளர் முருகன், கண்காணிப்பாளர்கள் மாரியப்பன், சதீஷ் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

Related Stories:

>