நடிகர் விவேக் படித்த பள்ளி மாணவர்களுக்கு மரக்கன்று விநியோகம்

நெல்லை, ஏப். 20: மறைந்த நடிகர் விவேக், பாளை சேவியர் பள்ளி முன்னாள் மாணவர் ஆவார். இங்கு அவர் 6ம் வகுப்பு மட்டும் பயின்றார். பின்னர் முருகன்குறிச்சியில் உள்ள பள்ளியில் 8ம் வகுப்புவரை படித்தார். இந்நிலையில் விவேக் மறைவையொட்டி சேவியர் பள்ளி வளாகத்தில் மாணவர்களுக்கு மரக்கன்று வழங்கி நினைவஞ்சலி செலுத்தப்பட்டது. பள்ளி வளாகத்தில் அலங்கரித்து வைத்திருந்த விவேக் படத்திற்கு முன்னாள் மாணவர் மன்ற இயக்குநர் குழந்தைராஜ் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பள்ளி தலைமை ஆசிரியர் அகஸ்டின் ஜான்பீட்டர் முன்னிலை வகித்தார். உதவி தலைமை ஆசிரியர் ஜான்கென்னடி, முன்னாள் மாணவர் மன்ற செயலாளர் பால் கதிரவன், பொருளாளர் லாசர் உள்ளிட்டோர் பேசினர். நடிகர் விவேக், இப்பள்ளியில் கடந்த 1971-72ம் கல்வியாண்டில் 6ம் வகுப்பு `பி’ பிரிவில்  மாணவராக பயின்ற நினைவுகளை அனைவரும் பகிர்ந்து ெகாண்டனர். அவரது கொள்கையான மரக்கன்றுகளை நடும் திட்டத்தை வலியுறுத்தி பள்ளி மாணவர்களுக்கு இலவச மரக்கன்றுகள் வழங்கி அதை வளர்த்து பராமரிக்குமாறு ஆசிரியர்கள் கேட்டுக்ெகாண்டனர்.

Related Stories:

More
>