கரூர் மாவட்டத்தில் டாஸ்மாக் கடை, பார் 25ம்தேதி, மே 1 மூடல்

கரூர், ஏப்.19: கரூர் கலெக்டர் பிரசாந்த் வடநேரே விடுத்துள்ள செய்திக்குறிப்பு: கரூர் மாவட்டத்தில் வரும் 25ம்தேதி மஹாவீர் ஜெயந்தி தினம், மே 1ம்தேதி உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு, அரசு மதுபான சில்லறை விற்பனை கடைகள், அதனுடன் இணைந்த பார் மற்றும் எப்எல்3 பார்களில் விற்பனை முடக்கம் செய்யப்படுகிறது. விதிமுறைகளை மீறி விற்பனை செய்பவர்கள் மீது தமிழக அரசு மதுபான சில்லறை விற்பனை விதிகள் 2003ன் கீழும், 1989ன் கீழும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

More
>