×

ராமானுஜர் பிறந்தநாளையொட்டி தலசயன பெருமாள் கோயிலில் சிறப்பு அபிஷேகம்

மாமல்லபுரம், ஏப். 19: ராமானுஜர் 1017ம் ஆண்டு சித்திரை மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில், பூதபுரி என்று அழைக்கப்பட்ட தற்போதைய பெரும்புதூரில் பிறந்தார். வைணவ சமயத்தை தோற்றுவித்தவரும், சாதி, மதங்களை கடந்து மனிதனை மனிதன் நேசிக்க வேண்டும் என உயரிய கருத்தை 1000 ஆண்டுகளுக்கு முன் வலியுறுத்தியவர் ராமானுஜர். ஓம் நமோ நாராயணாய என்ற 8 எழுத்து திருமந்திரத்தை திருக்கோஷ்டியூர் கோபுரத்தின் மீதேறி உலகமே அறியும் படி உரக்க கூறியவர். இந்நிலையில், ராமானுஜர் பிறந்த திருவாதிரை நட்சத்திரம் நேற்று வந்ததால், நாடு முழுவதும் அவரது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. இதையொட்டி, மாமல்லபுரம்  தலசயன பெருமாள் கோயிலில் தேவி, பூதேவியுடன் ராமானுஜர் அலங்கரிப்பட்டு 4 ஆயிரம் திவ்ய பிரபந்த பாசுரங்கள் பாடப்பட்டு உற்சவம் நடந்தது. சிறப்பு அபிஷேகமும் நடைபெற்றது.

நிகழ்ச்சி ஏற்பாடுகளையும் குன்னத்தூர் கிராமத்தினர் செய்தனர். காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் செவிலிமேடு பகுதியில் உள்ள ராமானுஜர் சன்னதியில் சித்திரை திருவாதிரை நட்சத்திரத்தில் அவதரித்த ராமானுஜரின் ஜெயந்தி விழா ேநற்று  விமர்சையாக நடந்தது. இதையொட்டி, ராமானுஜருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. வண்ண மலர்களால் அலங்ரித்து தூப, தீப ஆராதனைகள் செய்து, சிறப்பு பஜனை பக்தி பாடல்கள் பாடப்பட்டன. இதில், கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. அனைவரும் முககவசம், சமூக இடைவெளியுடன், சுவாமி தரிசனம் செய்தனர்.

Tags : Thalasayana Perumal Temple ,Ramanujar ,
× RELATED தலசயன பெருமாள் கோயிலில் பங்குனி உத்திர உற்சவம் நிறைவு