தபால் வாக்கு தொடர்பாக பெண் அலுவலரிடம் தகராறு செய்தவருக்கு குண்டாஸ்

ராமநாதபுரம், ஏப்.19: ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி தாலுகா குடிமை பொருள் வழங்கல் அலுவலர் சத்யபாமா. இவர் அபிராமம் அருகே செய்யாமங்கலம் கிராமத்தில் 80 வயது கடந்த 10 பேரின் தபால் வாக்கு சீட்டுகளை எடுத்துக் கொண்டு காரில் சென்றார். இந்த தபால் வாக்குகளில் செய்யாமங்கலம் சுப்ரமணியனின் தபால் ஓட்டை அவரது மருமகள் இந்து ராணி பதிவு செய்தார். அந்த ஓட்டை யாருக்கு பதிவு செய்தார் என காண்பிக்கச் சொல்லி சத்யபாமாவிடம், சுப்ரமணியனின் இளைய மகன் சண்முகவேல் வாக்கு வாதம் செய்து, சத்யபாமாவின் கார் கண்ணாடியை உடைத்தார்.இதுகுறித்து அபிராமம் போலீசில் சத்யபாமா புகார் அளித்தார். இந்த வழக்கில் சண்முகவேல், கைது செய்யப்பட்டு விருதுநகர் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார். இவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய ராமநாதபுரம் எஸ்பி கார்த்திக் பரிந்துரையில் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உத்தரவுப்படி சண்முகவேலை(44) அபிராமம் போலீசார் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.

Related Stories:

More