×

கபசுர குடிநீர் வழங்கல்

நாங்குநேரி, ஏப். 19:  பரப்பாடி தேவாலயத்தில் கபசுரக் குடிநீர் விநியோகிக்கப்பட்டது. கொரோனா வைரஸ் பரவலின் 2ம் அலை வீசி வருவதால் பலர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் மீண்டும் ஊரடங்கு வருமோ என பொதுமக்களிடம் அச்சம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா பரவலை தடுக்க பரப்பாடியில் உள்ள புனித ஆரோக்கிய மாதா தேவாலயத்திற்குட்பட்ட அந்தோணியார் கெபி முன்பு கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது. விஜயநாராயணம் இன்ஸ்பெக்டர் அசோகன் கபசுர குடிநீர் வழங்கி முகாமை துவக்கி வைத்தார். தொடர்ந்து 10 நாட்களுக்கு பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இதில் இலங்குளம் பங்குதந்தை சேகரன் மற்றும் இலங்குளம் அந்தோணிராஜ் உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags :
× RELATED பதுக்கிய பட்டாசுகள் பறிமுதல்