சிறையில் நளினி-முருகன் சந்திப்பு

வேலூர், ஏப். 18: வேலூர் பெண்கள் தனிச்சிறையில் நளினி- முருகன் நேற்று சந்தித்து பேசினர். முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் முருகன் வேலூர் மத்திய சிறையிலும், அவரது மனைவி நளினி பெண்கள் தனிச்சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர். நீதிமன்ற உத்தரவுபடி இருவரும் 15 நாட்களுக்கு ஒருமுறை சந்தித்து பேசி வருகின்றனர்.அதன்படி, வேலூர் மத்திய சிறையில் உள்ள முருகனை, டிஎஸ்பி சரவணன் தலைமையிலான போலீசார் பலத்த பாதுகாப்புடன் பெண்கள் தனிச்சிறைக்கு நேற்று அழைத்து சென்றனர். அங்கு காலை 9.50 மணி முதல் 10.20 மணி வரை இருவரும் சந்தித்து பேசினர். பின்னர் பலத்த பாதுகாப்புடன், முருகன் மீண்டும் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Related Stories:

More
>