நடிகர் விவேக் மறைவு நாடககலைஞர்கள் அஞ்சலி

திருச்சி, ஏப்.18: நாடக் கலையின் மூலமாக உலகத்துக்கு அறிமுகமான நடிகர் விவேக் மாரடைப்பால் சென்னையில் நேற்று இறந்தார். அவரின் இறப்புக்கு அரசியல் பிரமுகர்கள், திரையுலகினர், நாடக் கலைஞர்கள் அஞ்சலி செலுத்தினர். திருச்சி மாவட்ட நாடக நடிகர்கள் சங்கம் சார்பில் திருச்சி இபி ரோடு பகுதியில் உள்ள அதன் அலுவலகத்தில் நடிகர் விவேக் மறைவையொட்டி இரங்கல் தெரிவித்தனர். அவரது படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். செயலாளர் முகமது மஸ்தான் உள்பட பலர் பங்கேற்றனர்.திருவெறும்பூர் மலை கோயில் ராஜவீதியில் நடிகர் விவேக் மறைவிற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இயற்கை ஆர்வலர்கள் மரக்கன்றுகளை நட்டு வைத்து அஞ்சலி செலுத்தினார்.திருவெறும்பூர் இன்ஸ்பெக்டர் ரத்தினகுமார், எஸ்ஐ நாகராஜ், எறும்பீஸ்வரர் கோயில் செயல் அலுவலர் வெற்றிவேல் மற்றும் இயற்கை ஆர்வலர்கள் ஆகியோர் புங்கை, வேம்பு, செங்கொன்றை, பூவரசு, உள்ளிட்ட மர வகைகளை நட்டு வைத்து அஞ்சலி செலுத்தினர்.

Related Stories:

More
>