மணப்பாறை அருகே பஸ்கள் நிற்காததால் மக்கள் மறியல்

மணப்பாறை, ஏப். 18:திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே மரவனூர் கிராமம் உள்ளது. நேற்று மணப்பாறையில் இருந்து திருச்சிக்கு புறப்பட்ட அரசு மற்றும் தனியார் பஸ்கள் மரவனூரில் நின்று செல்லவில்லை. கொரோனா காரணமாக பஸ்களில் பயணிகள் நின்று கொண்டு பயணிக்க அரசு தடை விதித்துள்ளது. இதன் காரணமாக பஸ்கள் மரவனூரில் நிற்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் பஸ்கள் நிற்காததை கண்டித்து மரவனூரில் நேற்று காலை கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீசார் மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து போக்குவரத்து பணிமனைக்கு பேசி ஒரு பஸ் மரவனூருக்கு வரவழைக்கப்பட்டது. பின்னர் அந்த பஸ் மரவனூரில் இருந்து திருச்சிக்கு இயக்கப்பட்டது. மறியல் காரணமாக மணப்பாறை- திருச்சி சாலையில் சுமார் 20 நிமிடம் போக்குவரத்து பாதித்தது.

Related Stories: