நடிகர் விவேக் மறைவு மரக்கன்றுகள் நட்டு அஞ்சலி

கும்பகோணம், ஏப்.18: நகைச்சுவை நடிவர் விவேக் நேற்றுமுன்தினம் மாரடைப்பால் காலமானார். மறைந்த நகைச்சுவை நடிகர் விவேக்கிற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கும்பகோணம் தனியார் பள்ளி மாணவிகள் நேற்று அவரது உருவப் படத்திற்கு மெழுகுவர்த்தி ஏந்தியும், மலர்கள் தூவியும் அஞ்சலி செலுத்தினர். அதனைத் தொடர்ந்து பள்ளி வளாகத்தில் அவரது நினைவை போற்றும், கலாமின் கனவை அவர் நிறைவேற்ற எடுத்து கொண்ட முயற்சி போல, இயற்கையை நேசிக்கும் வகையிலும், மழை பெறவும், சுவாசிக்க தூய்மையான காற்றுக்காகவும் மரக்கன்றுகளை நட்டனர். பாபநாசம்: சின்ன கலைவாணர் என அழைக்கப்பட்ட திரைப்பட நடிகர் விவேக் மாரடைப்பால் காலமானார். அவரது மறைவுக்கு அனுதாபம் தெரிவிக்கும் வகையில் கலை, இலக்கிய பெருமன்ற கிளைச் சார்பில் பாபநாசம் அடுத்த பண்டாரவாடையில் விவேக் படத்திற்கு மாலையணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் கிளை தலைவர் நவநீதகிருஷ்ணன், சிவசக்திராஜா, அன்பழகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பேராவூரணி: பேராவூரணி அருகே உள்ள ஆவணத்தில் செயல்பட்டு வரும் சமூகப்பணிக்குழு இளைஞர் குழு ஏரி, குளங்கள், தூர்வாருதல், குளக்கரை, ஏரி, பள்ளிகளில் மரக்கன்றுகள் நடுதல் உள்ளிட்ட பணிகளை தொடர்ந்து செய்து வருகிறது. இந்தாண்டு நிறைவுக்குள் 50 ஆயிரம் மரக்கன்றுகள் நட திட்டமிட்டு அதற்கான வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். மரக்கன்றுகள் நடுவதை தமது பணிகளில் ஒன்றாக கொண்டு செயல்பட்டு வந்த நடிகர் விவேக் மறைவிற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ஆவணத்தில் பசுமை விவேக் என்ற பெயரில் பல்வேறு இடங்களில் மரக்கன்றுகள் நட்டனர்.

Related Stories:

More
>