தீ தொண்டு நாள் விழாவையொட்டி செவிலியர்களுக்கு செயல்விளக்கம்

அறந்தாங்கி. ஏப்.18: புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள ஜெகதாப்பட்டினம் தீயணைப்பு துறை சார்பில் மணமேல்குடி அரசு மருத்துவமனையில் தீ தொண்டு நாள் வார விழா நடைபெற்றது. அப்போது தீ தடுப்பு குறித்து அரசு மருத்துவமனையில் உள்ள செவிலியர் மற்றும் அனைத்து ஊழியர்களுக்கும் செயல் விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. மேலும் தீ அணைக்க பயன்படும் உபகரணங்கள் கையாள்வது குறித்து மருத்துவமனை ஊழியர்களுக்கு செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. தொடர்ந்து தீ பாதுகாப்பு, தீயினால் ஏற்படும் விபத்துகளை தவிர்ப்பது, தீக்காயங்களுக்கு முதலுதவி குறித்து தீயணைப்பு துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும் தீ பாதுகாப்பு குறித்து துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது

Related Stories:

>