லாரி மோதி விவசாயி பலி

புதுக்கோட்டை, ஏப்.18: புதுக்கோட்டை மாவட்டம் மடவிடுதியை சேர்ந்தவர் விஜயகுமார்(35). விவசாயியான இவர் நேற்று புதுக்கோட்டை-தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் டூவீலரில் சென்று கொண்டிருந்தார். சிறு வாய்குளம் அருகே சென்றபோது எதிரே மணல் ஏற்றி வந்த லாரி பயங்கரமாக மோதியது. இதில் விஜயகுமார் சம்பவ இடத்திலேயே இறந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆதனகோட்டை போலீசார் விஜயகுமார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

More