செங்கோட்டையில் தீ தொண்டு நாள் அனுசரிப்பு

செங்கோட்டை, ஏப்.17: செங்கோட்டை தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி நிலையத்தில் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் தீ தொண்டு நாள் அனுசரிக்கப்பட்டது.

தீயணைப்பு மற்றும் மீட்பு பணியின் போது உயிர்நீத்த தீயணைப்பு வீரர்களின் தியாகங்களை நினைவு கூறும் வகையில் ஆண்டுதோறும் ஏப்ரல் 14ம்தேதி தீ தொண்டு நாள் கடைபிடிக்கப்பட்டு, உயிர் தியாகம் செய்த தீயணைப்பு வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்படுகிறது. இதன்படி செங்கோட்டை தீயணைப்பு நிலையத்தில் நடந்த தீ தொண்டு நாள் அனுசரிப்பு நிகழ்ச்சியில் நிலைய அலுவலர் சிவசங்கரன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் நினைவு ஸ்தூபியில் மலர் வளையம் வைத்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். வரும் 20ம்தேதி வரை தீ தொண்டு வாரவிழா கடைப்பிடிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>