வாசுதேவநல்லூரில் அதிமுகவினர் நீர்மோர், கபசுரக்குடிநீர் வழங்கல்

தென்காசி, ஏப். 17: வாசுதேவநல்லூரில் அதிமுக சார்பில் பொதுமக்களுக்கு நீர்மோர், கபசுரக்குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மனோகரன் எம்எல்ஏ தலைமை வகித்து பொதுமக்களுக்கு நீர்மோர் மற்றும் கபசுரக்குடிநீர் வழங்கினார்.

இதில் ஒன்றிய செயலாளர்கள் மூர்த்தி பாண்டியன், துரைப்பாண்டியன், மாவட்ட மாணவரணி முன்னாள் தலைவர் சசிகுமார், ஒன்றிய அவைத்தலைவர் முகம்மது உசேன், பேரூர் அவைத்தலைவர் நீராவி, பொருளாளர் திவான் மைதீன், மாவட்ட பிரதிநிதி பெரியதுரை, பேரூர் செயலாளர்கள் சீமான் மணிகண்டன், சேவகப்பாண்டியன், காசிராஜன், பேரூர் ஜெ. பேரவை செயலாளர் முருகையா, இதயக்கனி, முத்துராமலிங்கம், விசாலாட்சி முருகன் கலந்து கொண்டனர்.

Related Stories:

>