×

சேந்தமங்கலத்தில் கொரோனா தடுப்பு பணிகள் தீவிரம்

சேந்தமங்கலம், ஏப்.18:  சேந்தமங்கலம் பகுதிகளில் வருவாய்த்துறையினர் கொரோனா தடுப்புப் பணி குறித்து தீவிர ஆய்வு மேற்கொண்டனர். தாசில்தார் சுரேஷ் பேரூராட்சி செயல் அலுவலர் காலசாமி ஆகியோர் தலைமையில், துப்புரவு ஆய்வாளர் பாலு, வருவாய் ஆய்வாளர் ரவி கிராம நிர்வாக அலுவலர் சரவணன் வருவாய்த்துறையினர், பேரூராட்சி பணியாளர்கள் 15 பேர் அடங்கிய குழுவினர் மெயின் ரோடு, கடைவீதி ஆகிய பகுதிகளில் உள்ள இறைச்சிக் கடைகள், வணிக நிறுவனங்கள் ஆகியவற்றில் கொரோனா தடுப்பு பணி பின்பற்றப்படுகிறதா என ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது சமூக இடைவெளி, முக கவசம் அணியாத 10 கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இதையடுத்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு நோட்டீசை வழங்கப்பட்டது. அப்போது 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் உடனடியாக அரசு மருத்துவமனையில் தடுப்பூசி போட்டுக் கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்பட்டது. பொதுமக்கள் வீட்டைவிட்டு வெளியே வரும்போது கட்டாயம் முக கவசம் அணிந்து வரவேண்டும் இனிவரும் காலங்களில் தீவிர வாகன தணிக்கை செய்யப்படும். முக கவசம் அணியாமல் வந்தால் கண்டிப்பாக அபராதம் விதிக்கப்படும் என தெரிவித்தனர்.   

Tags : Chennamangalam ,
× RELATED சேந்தமங்கலத்தில் தேர்தல் விதிமுறை ஆலோசனை கூட்டம்