தொடர் மழையால் விருதுநகரில் குளங்களாக மாறும் சாலைகள் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதி

விருதுநகர், ஏப்.18:விருதுநகர் சிவகாசி ரோடு பிரியும் பகுதியில் நான்குவழிச்சாலை சர்வீஸ் ரோட்டின் இருபுறமும் மழைநீர் வழிந்தோடும் வாறுகால்களில் அடைப்பு மற்றும் வெளியேற வழியின்றி மழைநீர் தேங்கி நிற்கிறது. சர்வீஸ் ரோடுகளில் மழைநீர் குளம் போல் தேங்கி நிற்பதால் சர்வீஸ் ரோட்டில் செல்லும் கனரக வாகனங்கள், டூவீலர் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.நான்குவழிச்சாலை பரமரிப்பு பிரிவினர் சர்வீஸ் ரோட்டில் தேங்கி நிற்கும் மழைநீர் வெளியேற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கலெக்டர் அலுவலகம் எதிர்புறத்தில் வட்டார போக்குவரத்து அலுவலக பின்புறமுள்ள கூரைக்குண்டு கிராமத்திற்கு செல்லும் ரயில்வே தரைப்பாலத்தில் மழைநீர் வெளியேற வழியின்றி தேங்கி கிடக்கிறது. மழைநீர் வற்றினாலும் தேங்கி கிடக்கும் சேறு, சகதியை ரயில்வே அகற்றுவதா, ஊராட்சி அகற்றுவதா என்ற பிரச்னை தொடர்கிறது. சேறு, சகதியால் டூவீலரில் செல்வோர், பாதசாரிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். ரயில்வே தரைப்பாலங்களை பராமரிக்க உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டுமென மக்கள் தெரிவிக்கின்றனர்.

Related Stories:

>