×

ராஜபாளையத்தில் மராமத்து செய்யாததால் புதர் மண்டிக் கிடக்கும் கண்மாய்கள் குப்பை கொட்டுவதால் நிலத்தடி நீர்மட்டம் பாதிப்பு

ராஜபாளையம், ஏப். 18:ராஜபாளையம் பகுதியில் பல்வேறு கண்மாய்கள் மராமத்து பணி செய்யாததால் புதர் மண்டி கிடக்கிறது. ராஜபாளையம் மேற்கு மலைத் தொடர்ச்சி பகுதியில் உற்பத்தியாக கூடிய மழைநீரை நம்பி நூற்றுக்கணக்கான கண்மாய்கள் உள்ளன. இப்பகுதியில் பெயரளவிற்கு ஒருசில கண்மாய்களில் மட்டும் மராமத்து பணி நடைபெற்றது. ஆனால், ஏராளமான கண்மாய்கள் மராமத்து செய்யாததால் புதர் மண்டி கிடக்கிறது. மேலும் கட்டிட கழிவுகளும், குப்பையும்
கொட்டும் இடமாக மாறி வருகிறது. இதனால் கண்மாய்களில் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் குடியிருப்பு பகுதியில் தொற்றுநோய் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், கண்மாய்கள் குப்பைக் கிடங்காக மாற்றப்படுவது குறித்து பலமுறை புகாரளித்தும் வருவாய்த்துறையினர் கண்டு கொள்ளவில்லை. இப்பகுதியில் உள்ள சில தொண்டு நிறுவனங்கள் கண்மாய் மராமத்து பணிகள் செய்வதற்கு முன் வந்தன. ஆனால், அதற்கு அனுமதி வழங்க தயக்கம் காட்டியதால் பல கண்மாய்கள் விவசாயத்திற்கான தண்ணீர் கிடைக்காமல், நிலத்தடி நீர்மட்டமின்றி உள்ளன.எனவே, ராஜபாளையத்தில் உள்ள கண்மாய்களை தூர்வாரி நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த வேண்டும். மேலும் குப்பைகள் கொட்டுவதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். இவ்வாறு கூறினர்.

Tags : Rajapalayam ,
× RELATED கல்லூரி முன்னாள் மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி