தேனியில் மக்களுக்கு இலவச மாஸ்க் மாவட்ட எஸ்பி வழங்கினார்

தேனி, ஏப். 18: தேனி நகர் பழைய பஸ் நிலையத்தில் பொதுமக்களுக்கு மாஸ்க்குகளை மாவட்ட போலீஸ் எஸ்.பி வழங்கினார். மாவட்டத்தில் கொரோனா நோய்த் தொற்றுக்கு 17 ஆயிரத்து 771 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், 17 ஆயிரத்து 213 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். இதுவரை 208 பேர் வரை இந்நோயால் உயிரிழந்துள்ளனர். தற்போது, கொரோனா பாதிக்கப்பட்ட 350 பேர் தேனி அரசினர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தேனியில் கொரோனா கட்டுப்பாட்டு வழிமுறைகளை பின்பற்றாதவர்கள் மீது போலீசார், வருவாய்த் துறை, சுகாதாரத்துறை, உள்ளாட்சித் துறை உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன்படி, பொது இடங்களில் மாஸ்க் அணியாதவர்கள், சமூக இடைவெளியை பின்பற்றாதவர்கள் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் அபராதம் வசூலித்து வருகின்றனர். இந்நிலையில், தேனி நகர் பழைய பஸ் நிலையத்தில், மாவட்ட எஸ்பி சாய்சரண் தேஜஸ்வி போ லீசாருடன் வந்து, மாஸ்க் அணியாத பயணிகளுக்கு மாஸ்க அணிவதன் அவசியத்தைக் கூறி இலவசமாக மாஸ்க்குகளை வழங்கினார்.

Related Stories:

>