ஹாக்கியில் மதுரை வீரர் சாதனை

மதுரை, ஏப். 18: தேசிய அளவிலான 58வது ரோலர் ஸ்கேட்டிங் ஹாக்கிப்போட்டி சண்டிகரில் நடந்தது. இதில், 9 வயது முதல் 11 வயதுக்குட்பட்டோருக்கான பிரிவில் இந்திய அளவில், தமிழக அணி வீரர்கள், பயிற்சியாளர் வெங்கடேஷ் தலைமையில் பங்கேற்றனர். இந்த அணி 12 ஆண்டுகளுக்குப் பிறகு, வெள்ளிப்பதக்கம் வென்று சாதனை படைத்தது. இதில், மதுரையைச் சேர்ந்த தமிழக வீரர் கேப்டன் எஸ்.கே.சந்தோஷ் நாகரத்தினம் தேசிய அளவில் 14 கோல்கள் அடித்தார். கடந்த 58 ஆண்டுகளில் 9 வயது முதல் 11 வயது பிரிவில் முதன்முறையாக இந்த சாதனை நிகழ்த்தப்பட்டதாக கேப்டன் எஸ்.கே.சந்தோஷ் நாகரத்தினத்தை பாராட்டினர். இவர், தனது 6 வயதில் இருந்து பயிற்சியாளர் வெங்கடேஷிடம் பயிற்சி ெபற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>