திருப்பூர் பனியன் நிறுவனங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கை தீவிரம்

திருப்பூர், ஏப். 18: கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பனியன் நிறுவனங்களில் கொரோனா தடுப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. திருப்பூரில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பனியன் நிறுவனங்களில் சுமார் 6 லட்சம் தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள். இந்நிலையில் தற்போது கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக பனியன் தொழிலாளர்கள் பலருக்கு கொரோனா பாதிப்பு வந்து கொண்டிருப்பதால், பனியன் நிறுவனங்களில் கொரோனா தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது: திருப்பூர் மாநகர பகுதிகளில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. பனியன் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இதனால் பனியன் நிறுவனங்களுக்கு சென்று சமூக விலகல் கடைபிடிக்கப்படுகிறதா?, தொழிலாளர்கள் முககவசம் அணிந்துள்ளனரா? என்பது உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்து வருகிறோம். இதுபோல் வெப்ப பரிசோதனை செய்த பின்னரே தொழிலாளர்களை உள்ளே அனுமதிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தி வருகிறோம். காய்ச்சல் பாதிப்பு அவ்வாறு இருந்தால் உடனே அவர்களை ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அரசு மருத்துவமனைகளுக்கு பரிசோதனைக்கு செல்ல அறிவுறுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Stories:

More