திருச்சியில் சின்னத்திரை நடிகையை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த ரவுடி கைது

திருச்சி, ஏப். 17: திருச்சி சத்திரம் மேலசிந்தாமணி காவேரி நகரை சேர்ந்தவர் வேலு. இவரது மனைவி ராஜலட்சுமி (36). டெய்லர் மற்றும் சின்னதிரை துணை நடிகை. இவருக்கு மகன், மகள் உள்ளனர். இதில் ராஜலட்சுமி கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் கடந்த சில ஆண்டாக கிராப்பட்டி, அன்பு நகரில் பெண்களுக்கான டெய்லரிங் கடை வைத்து நடத்தி வருகிறார். அப்போது திருச்சி மதுரை ரோடு எ.புதூர் காவல் நிலையம் அருகே வசித்து வந்த ரவுடி மவுலி (எ) சந்திரமவுலி (36) என்பவர் டெய்லரிங் கடை வழியே சென்று வருகையில் இருவருக்கிடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. ராஜலட்சுயின் வீட்டு வாடகை உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றி வந்தார்.

இதற்கிடையில் ராஜலட்சுமி மீதான மோகம் குறைந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் உடல் நிலை பாதிக்கப்பட்ட ராஜலட்சுமிக்கு மருத்துவ செலவை ஏற்று கொள்ளாமல் தவிர்த்து வந்தார். இதனால் ஆவேசமடைந்த ராஜலட்சுமி, நேற்று முன்தினம் இரவு ரவுடி மவுலி வீட்டிற்கு சென்று அவரிடம் தகராறில் ஈடுபட்டார். அப்போது, ராஜலட்சுமியை தாக்கி அவருக்கு கொலை மிரட்டல் விடுத்தார். இதுகுறித்து ராஜலட்சுமி அளித்த புகாரின் பேரில் எ.புதூர் போலீசார் நேற்றுமுன்தினம் இரவு சந்திரமவுலியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories:

>